Sunday, November 22, 2009

டிசம்பர் 31

உங்களின் செல்பேசி நிறுவனத்தின் சேவை, உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால்... செல்லிடப்பேசியின் எண்ணை மாற்றம் செய்யாமல், ரூ.19.00 மட்டும் கட்டணமாக செலுத்தி, வேறு நிறுவனத்தின் சேவையை பெற முடியும். இது வருகின்ற டிசம்பர் திங்கள் 31ம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என டிராய் கூறியுள்ளது.
இந்த வசதியை கடந்த அக்டோபர் திங்கள் முதல் அறிமுகப்படுத்த தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் திட்டமிட்டிருந்தது. அதற்கான பணிகள் நிறைவேற்றாத காரணத்தால் தாமதமானது. இப்போது உள்கட்டமைப்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் செயல் படுத்த உள்ளது. முதல் கட்டமாக புதுதில்லி, மும்பை,கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத மற்றும் ஆந்திரா உள்ளிட்ட ஏ பிரிவு மாவட்டங்களில் நடைமுறைக்கு வர உள்ளது. இது படிப்படியாக பிறபகுதிகளிலும் நடைமுறைக்குக் கொண்டு வர மார்ச் திங்கள் ஆகிவிடலாம்.
வேறு நிறுவன சேவைக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் தாங்கள் இணைப்பு பெற்றுள்ள நிறுவனத்துக்கு விண்ணப்பித்தால், கோரிக்கை பெற்ற நான்கு நாட்களுக்குள் அவர்கள் விரும்பும் நிறுவன சேவைக்கு மாற்றித் தருவார்கள். இதற்கு அதிகபட்சமாக ரூ.19 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகின்றது.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் மாற்றித் தரும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.75 முதல் ரூ.200 வரை வசூலிக்கப்படும் என தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையும் தெரிவித்துள்ளது. செல்பேசி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்ளவதற்காக கட்டணப் போட்டிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த முறை அமலுக்கு வந்தால் இன்னும் கடுமையான போட்டி நிலவும். இது வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை தருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.!